மருந்தாகும் மசாலாப் பொருள்கள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்
Description
கடுகு, பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதலான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிக்கும். மூல வியாதியைத் தவிர்க்கும். சமையலுக்குத் தாளிதம் செய்வதற்கு உதவும்.
பொதுவாக ஹோர்மோன் சமநிலை பிறழ்வு காரணமாக இளம் வயதுப் பெண்களுக்கும் நடுவயது கடந்த பெண்களுக்கும் மாதவிலக்கின்போது கூடுதலாக இரத்தம் வெளியேறுவதுண்டு. இதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மூலிகைகளுள் கடுகும் ஒன்று.
சீரகத்தில் இரும்புச்சத்து நிறைய உண்டு. பொதுவாக இந்தச் சத்துக்குறைவினால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பருவ வயதினரே கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் உணவில் சீரகத்தைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தத்துடன் இரும்புச்சத்து இழக்கப்படுவதால் இவர்களுக்குச் சீரகம் சேர்ந்த கறி சமைத்துக்கொடுக்கும் வழக்கம் இலங்கை மக்களிடம் இருப்பதை இவ்விடத்தில் நினைவுகூரலாம். பெண்களில் மாதவிலக்குச் சுழற்சி சீராக நடைபெறுவதற்கு சீரகம் உதவுகிறது.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 mL (ஒரு கப்) தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிட்டுவிட்டு அந்தத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவர உடல் சூடு, மலச்சிக்கல் என்பன வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் மோரில் வெந்தயத்தை ஊறவைத்தும் குடிக்கலாம். நீரிழிவு நோயாளர்க்கும் இது நல்லது என்று கூறப்படுகிறது.
இரசவர்க்கத்தில் கொத்தமல்லி கண்ணுக்கும் காந்தி (ஒளி) தரும் என்று கூறப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். வைட்டமின் A கண்களின் விழிவெண்படலத்தைப் (cornea) பாதுகாப்பதன் மூலம் கண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. ஆரோக்கியமான சளியமென் சவ்வுகளினதும் சருமத்தோலினதும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் A அவசியமாகும்.
#சித்தமருத்துவம் #சித்தர்கள் #இரசவர்க்கம் #Cumin #சீரகம் #கடுகு #Mustard #Fenugreek #வெந்தயம் #கொத்தமல்லி #Coriandar #Cilantro #cholesterol